அன்று பேருந்தை தவற விட்டேன், என் இயலாமையை கண்டு நீ சிரித்தாய்...
என் மேல் காதலா என்றேன்? இல்லை உன் தவிப்பின் மேல் தான் காதல் என்றாய்...
அன்று ஜோ என்று கொட்டுகிற மழையில் துள்ளி ஆடினேன் ..
நீ அதை பார்த்து புன்னகைத்தாய் .. என் மேல் காதலா என்றேன்?
இல்லை உன் வெகுளித்தனத்தின் மேல் காதல் என்றாய்....
அன்று வீட்டில் அம்மா திட்டிவிட்டார்கள் என்று அழுது சினுங்கினேன்..
நீ அதையும் பார்த்து சிரிதாய் .. என்னடா என மேல் காதலா என்றேன்?
இல்லை சகி.. உன் குழந்தைதனத்தின் மேல் தான் காதல் என்றாய்...
ஒரு நாள் நீ என்னை பார்க்க தாமதமாக வந்தாய்.. ...
நான் உன் மேல் கோவப்பட்டு நன்றாக திட்டி விட்டேன்..
அதற்கும் நீ புன்முறுவல் பூத்தாய் ..
என்ன மச்சி நம்ப மேல காதலா என்றேன்?..
இல்லையடி உன் கோவத்தின் மேல் காதல் என்றாய்....
நானொரு புரியாத சிறுக்கி,
உனக்கு என மேல் காதல் இல்லை என்று நினை
உன்னை வீட்டு வெகு தொலைவில் போய் விட்டேன் ...
நீயோ,
"என் வாழ்க்கையில் வந்து சென்றாள் ஒரு மின்னலைப்போல!!
வருகையில் தடுக்கவும் முடியவில்லை! பிரிகையில் பிடிக்கவும் முடியவில்லை" என்று புலம்பி கொண்டிருக்கிறாய்....
என்னை உன் கண்களில் வைத்து கொள்ளாதே,
நீ அழுதால் நானும் கரைந்து போய்விடுவேன் உன் கண்ணீரோடு ...
என்னை உன் இதயத்தில் வைத்துக்கொள் .
உன் ஒவ்வொரு துடிப்பும் NAAN உனக்காக இருக்கிறேன் என்று ஞாபகபடுத்தும்....
No comments:
Post a Comment