Sunday, August 22, 2010

நேரத்தின் பெருமை

நண்பர்களே,
.
நேரத்தை கடைபிடிக்க கற்று கொண்டால், அனைத்து துறையிலும் ஜெயித்துக் காட்ட முடியும்



ஒரு ஆண்டின் பெருமையை தேர்வில் தோல்வியுற்றவன் அறிவான்.



ஒரு மாதத்தின் பெருமையை குறை மாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றும் தாய் அறிவாள்.



வாரத்தின் பெருமையை வார பத்திரிக்கையாளன் அறிவான்.



ஒரு நாளின் பெருமையை தினக்கூலி அறிவான்.



ஒரு மணி நேரத்தின் பெருமையை டாக்டரை சந்திப்பதில் அறியலாம்.



10 நிமிடத்தின் பெருமை காதல் செய்பவர்கள் அறிவர்.



ஒரு நிமிடத்தின் பெருமை ரயிலை தவற விட்டவர்கள் அறிவர்.



ஒரு வினாடியின் பெருமையை விபத்தில் சிக்கியவர்கள் அறிவர்.


இதனால் நேரத்தின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்...

No comments:

Post a Comment