Wednesday, August 18, 2010

வறுமையும் விலையேற்றமும்

சிகையலங்காரம் தாளிக்கும்,

எண்ணெய் பூச்சுக்களும்,

உடையலங்கோலமாக்கும்..


விடையற்ற உடுப்புக்களின்


தெளிப்புத் திரவங்களும்


நுனிமூக்கைத் துளைத்து


பொருளாதார மந்தநிலையிலும்



'நுகர்'வோர் நலன் காக்கிறது.



சலுகைகள் மற்றும் இலவசங்கள்

போனதை கொஞ்சம் மறந்துகொள்வோம்!




சத்தம் மாறாமல் வழங்கப் படுகிறது




வறுமையும் விலையேற்றமும்



அர்த்தம் மாறாமல் ஓட்டிக்கொண்டதை



வாங்கியப்பின்னரும் உணரமுடியவில்லை.




பட்டாணி மடித்துக் கொண்டுவந்த



பார்சல் தாளின் பத்தியொன்றில்



துப்புரவுத் தொழிலாளியின் சம்பள







உயர்வுச் செய்தி.



கடைசியில் காகிதத்தை கசக்கி



நடுரோட்டில் குப்பையாக்கிவிட்டு வந்தேன்.





அதிகாலை மழையில் நனைக்கப்பட்ட



நாளிதழுக்காக சண்டை போட அந்த



சிறுவன் நாளை கிடைப்பான்



அவன் வீடும் அதே மழையில் நெளிந்துப்
















No comments:

Post a Comment