நட்பு ஒரு பிறப்பல்ல.
அழகிய அவதாரம்.
இறைவன் வரைந்த வரைபடம் " நட்பு."
அதி சிறந்த பரிசு நட்பு.
நட்புக்கு நிகர் ... நல்ல நட்பே !
அழகிய மாடம் நட்பு.
தூய்மை அதன் அரண்.
மெய்யாய் இருக்கும் வரை
மெய்க் காவல் நட்பு !
உன்னை எடை போட
உன் நட்பு போதுமாகும்.
நம்பிக்கை நாணயம்,
சேர்ந்த கலவை நட்பு.
துன்பத்தில் சம பங்கு ..நல் நட்பு.
உன் விழியில் தூசி
நட்பின் விழியில் கண்ணீர்.
நல்ல நட்பு .. நாட்பட்டே கிட்டும்.
No comments:
Post a Comment