Wednesday, August 18, 2010

முத்தப் பரிமாற்றம்

அணு அணுவாய் உன் உதட்டை ரசித்து முத்தம்
கொடுக்க எனக்கும் ஆசை தான் அருகில் நெருங்குகையில்
உன்னைவிட உன் உதடு தான் அதிக வெட்கப்பட்டு
என் உதட்டில் ஒளிந்து கொள்கிறது எப்படி பிரிப்பது
என்னிலிருந்து உன்னையும் உன் உதடுகளையும்?......



முத்தமிட்டு என்னை வழி அனுப்பாதே

நானே போக நினைத்தாலும்
உன் முத்தம் என்னை முத்தமிட மீண்டும் தத்தெடுக்கிறது...


பிரிவு எவ்வளவு கொடுமையானது
என்று எனக்குப் புரிந்தது

உனது முதல் முத்தத்தில் இருந்து
நம் இரு உதடுகளும் பிரிந்த போதுதான்
இன்று வரை பிரிந்தே இருக்கிறது உன் உதடும் என் உயிரும்....


உன்னை அழகு படுத்துவதாக நினைத்துக் கொண்டு

தன்னை அழகு படுத்துகிறது அந்த சிவப்பு நிற உதட்டுச் சாயம்!



நம் இருவரின் பேரை உச்சரிக்கும் போது,
ஒருபோதும் உதடுகள் ஒட்டுவதில்லை,

ஒரே ஒரு முறை ஒட்டியது நீ என் பெயரை,
உச்சரிக்கும்போது கீழ் உதடு என் உதடாக,
நான் உன் பெயரை உச்சரிக்கும்போது மேல் உதடு உன் உதடாக...



நீ உதிர்த்த முத்தத்தில் சரம் தொடுத்தேன்

பூவாய் உனது உதடு மணமாய்
உன் வாசனை துளியாய் உன் எச்சில்...



கொடுக்கும் போது வேண்டாம் என்பாய்...

வேண்டாம் எனும்போதோ கொடுக்கத் துடிப்பாய்...
உன்னையும் உனது முத்தத்தையும்...
புரிந்து கொள்ள முடியாதவனாய் இன்றும் நான்.....


No comments:

Post a Comment