Thursday, August 19, 2010

சொர்கம்கூட நரகம்தான் அவள் இல்லாமல்

போன வழியும் தெரியல




                               வந்தவழியும் புரியல;



கண்மூடி திறக்கும் முன்



எல்லாமே நடந்துருச்சு...



அவ கிட்ட கூட சொல்லல,




கை பிடிச்ச நாளாய்!!



என் நிழலாய், என் தோழியாய், என் உயிராய்



என் கூடவே தான் அவ இருப்பா;





பாவி அவ தனியா என்னத்த செய்வாளோ



புரியலையே!




நான் சிரிச்சா அவ சிரிப்பா,



நான் அழுதா அவ தொடப்பா,



இன்பமோ துன்பமோ ஒன்னாதான் இருந்துருகோம்


சோறு தண்ணி கூட இறங்காது அவளுக்கு



நான் சாப்புடாம;





வெளிய நான் போனாலும் மனசெல்லாம்



வழியில வெச்சு காத்து கெடப்பா;




நித்தம் ஒரு சண்டையின்னு போட்டு கிட்டா கூட



ஒருத்தருகொருத்தர் பேசாம இருந்தது இல்ல;





பிள்ளைங்க ரெண்டு பொறந்தும் கூட



எங்க காதல் கொறையவே இல்ல;





மருமகளுங்க வந்தும் கூட



அவ கையாள சாப்டா தான் வயிறு நிறையும்




கெழவி ஆகியும் கூட அவ இன்னும்



எத்தனை அழகாதான் இருக்குறா;




என்ன உசுரா நேசிச்ச அந்த சிருக்கிய



விட்டுட்டு வந்துட்டேனே; !

No comments:

Post a Comment