Tuesday, September 21, 2010

Marrige

பத்துபைசா கேட்டவனுக்கு பிச்சைக்காரன் பட்டம்,

பல லட்சம் கேட்பவனுக்கு மாப்பிள்ளை பட்டம்,

வாங்கி கொடுப்பவருக்கு காரியஸ்தர் பட்டம்,

அதை அங்கிகரிப்போருக்கு மொவ்லவி பட்டம்,

இவர்களுக்கு அல்லாஹ் வைதிருக்கிறான், இடது கையில் கொடுக்கும் பட்டம்.

Thursday, August 26, 2010

Best of Kerala Breakfast - NEW



















பெருமானாரின் பத்து கட்டளைகள்...

அஸ்ஸலாமு அலைக்கும்! வரஹ்மத்துல்லாஹ்....


பெருமானாரின் பத்துக் கட்டளைகள்
1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….
பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-
அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.
இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல..,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5..மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.
முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!
இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.
ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல.. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்..) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?
'நிச்சயமாக r(இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!'

அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.
இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!

இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறவா!நீயே இதற்கு சாட்சி!


இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.

மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.


(ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்

புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம்

VISIT VISA LIFE



பெருமூச்சே – எங்களின்
சாதாரண சுவாச
சப்தங்களானது,

வாக்குறுதி கொடுத்து
நம்பிக்கையூட்டும்
ஒவ்வொருவரையும் நம்பியே
நம்பிக்கை இழக்கிறோம் நாங்கள்!


ஊரில்…
வெளியே சென்றுவிட்டு வந்தாலோ
"இப்படியே பொலப்பில்லாம
ஊர் சுத்துறியே" என்ற குரல்கள் தடித்தது,



துபையில்…
வேலைத்தேடி அலைந்து விட்டு
வெறுத்துப் படுத்தாலும்
"யார் வேலைத் தருவா போய்
பார்க்கும் கட்டிடங்களி லெல்லாம்
ஏறி இறங்கு" என்ற உரல்கள் இடிக்கிறது.



நண்பர்களைப் பார்த்தால்
புலம்பி தீர்ப்பதைத் தவிர
வேறு என்ன வடிகால்..
அதிகமாக உஷ்ணப்படும் போதெல்லாம்..
ஊதித்தள்ளுவது கொண்டு தான்
சற்று தப்பிக்கிறோம் சூழலை விட்டு.


எத்தனையோ கனவுகளைச் சுமந்து
பறந்து வந்த நாங்கள்,
இரவுகளின் தனிமையில்
கண்ணீர் காதலியைத் தான்
கட்டித் தழுவுகிறோம்.



வரும் வரண்களில் – எந்த
முதலாளி மாப்பிள்ளையாவது
எங்களை மணந்து கொண்டு
வேலை கொடுத்தால் – இந்த
கண்ணிகள் மகிழ்வாய்
சொந்தம் சேர்ந்து கரை சேருவோம்.



கண்ணாடி சிரிக்க
தினம்..தினம்.. டிரஸ் செய்து,
காலையில் மணப்பெண்ணாய் புறப்பட்டு,
மாலையில் சீரழிந்தவளாய் கசங்கி வருகிறோம்.



பயோடேட்டாவை மட்டும்
சிரித்துக் கொண்டே வாங்கும் சிலர்
வேலைக் கேட்டாலோ
சிந்தித்து நிதானமாய்
பதிலைத் தேடுகிறார்கள்
அவர்களின் ஈரமொழிகளை நம்பி
தொலைபேசி தொடர்பு கொள்கையில்
செவிடு அவர்களின் செவிகளை
தொற்றிக் கொள்கிறது,
அடித்துக் கொண்டேயிருந்து
இறுதியில் நிற்கும் செல்போன் மணி.



முகம் தெரியாதவர்கள் எல்லாம்
துக்கம் விசாரிப்பது போல்
விசாரிக்க தவறுவதில்லை,
முகம் தெரிந்தவர்கள்
முன்னால் வந்தாலோ
முகம் ஏன் இவர்களுக்கெல்லாம்
என்றே எண்ணத் தோன்றுகிறது.



இந்த
கொடும் வெயில் தேசத்தில்
நெடுந்தூரம் அலைகையில்,
நடுவான் சூரியன் சுடுகையில்
வழித்து விடும்போது
பூமி தொடுவது
வியர்வை மட்டுமல்ல
கண்ணீரும் கலந்து தான்.



இங்கே
சூரியன் மட்டும் எரிக்கவில்லை
சிலரின் சிரிப்பும்
குடும்பச் சூழல் நெருப்பும்
சேர்ந்து எரிக்கிறது எங்களை,



வீட்டில் செல்லப்பிள்ளையாக
வளர்ந்தவர்கள் தான்
வீட்டை நினைத்துத்தான்
சொல்கிறோம் "நல்லா பாப்பேங்க
எந்த வேலையானாலும்" என்று
வாசல்த்தேடி நிற்கிறோம் என்பதற்காக
வயிற்றில் அடிக்கிறார்கள் – எங்களை
குறைந்த சம்பளக் கற்களால்…



தண்ணீர் தாகம்,
பசி மயக்கம் – இதற்கிடையில்
என் இனிய தாய் தந்தை
மனைவி மக்களின் முகங்கள்
நெஞ்சில் தோன்றினாலோ
மேலும் பல்கீனம்
நெஞ்சு பதைக்கிறது
பஞ்சு பற்றி எரிகிறது



இந்த
ஐஸ்கீரீம் விசாவோடு
எங்கள் வயிற்றில்
எப்போதும் நெருப்புத்தான்
கரைந்து விட்டால்
யார் தருவார்
‘ஐந்நூற்று ஐம்பது’
ரினிவல் செய்ய.



எங்களின் கனவெல்லாம்
ஒரு "எம்ப்ளாய்மென்ட் விசா"
எங்களின் மீது இரக்கமுள்ளவர்களே
ஏதாவது வேலையிருந்தால்
கொஞ்சம் சொல்லுங்களேன்..!



யார் யாருக்கோ
வேலை கொடுக்கும் துபாயே!
வேலைகிடைக்காமல் ஊர் சென்றால்
என் மக்களே - ஒரு
மண்புழுவிற்கு கொடுக்கும்
மரியாதையைக் கூட
கொடுக்காமல் போவார்களே
அதற்காகவாவது - ஓர்
வேலைக் கொடு..!

நாமும் உதவி செய்வோம்....
நம்மால் முடிந்தவரை....

Lovely Thoughts









Tuesday, August 24, 2010

Indian Magical Medicinal Herbs

COLDS



Mix a gram of dalchini/cinnamon powder with a teaspoon of honey to cure cold. Prepare a cup of tea to which you should add ginger, clove, bay leaf and black pepper.. This should be consumed twice a day. Reduce the intake as the cold disappears.

GINGER FOR COLDS.

  

Ginger tea is very good to cure cold. Preparation of tea: cut ginger into small pieces and boil it with water, boil it a few times and then add sugar to sweeten and milk to taste, and drink it hot.

DRY COUGHS.




Add a gram of turmeric (haldi) powder to a teaspoon of honey for curing dry cough. Also chew a cardamom for a long time.